உலகம்
இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஐகோர்ட்டில் வழக்கு

Update: 2022-01-17 02:15 GMT
இங்கிலாந்தில் தனது பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு இளவரசர் ஹாரி விரும்புகிறார். ஆனால் அதற்கு அந்த நாட்டின் உள்துறை அலுவலகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
லண்டன் :

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி.இவர் கடந்த 2020-ம் ஆண்டு அரண்மனை பதவி, அதிகாரத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது இளவரசர் ஹாரி அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மனைவி மேகன், மகன் ஆர்ச்சி, மகள் லிலிபெட்டுடன் வசிக்கிறார். இவர் இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் சென்று வர விரும்புகிறார். ஆனால் தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணுகிறார்.

தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கு வெளிநாட்டில் பாதுகாப்பு வரம்பு இல்லை என்று கருதுகிறார்.எனவே இங்கிலாந்தில் தனது பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு இளவரசர் ஹாரி விரும்புகிறார். ஆனால் அதற்கு அந்த நாட்டின் உள்துறை அலுவலகம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அங்குள்ள ஐகோர்ட்டில் இளவரசர் ஹாரி வழக்கு தொடுத்துள்ளார்.

இளவரசர் ஹாரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அவர் பிறந்தது முதலே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவரது சட்டப்போராட்டம் வெல்லுமா, அவர் இங்கிலாந்தில் குடும்பத்துடன் இருக்கிறபோது அளிக்கப்படுகிற பாதுகாப்புக்கு சொந்தப்பணத்தில் இருந்து தர அனுமதி கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News