உலகம்
சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு

சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு

Published On 2022-01-06 02:18 GMT   |   Update On 2022-01-06 02:18 GMT
அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஹெனான் மாகாணத்தில் 1978-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங் :

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

அதை தொடர்ந்து, சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேருகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்ததாக புள்ளிவிவர தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஹெனான் மாகாணத்தில் 1978-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது 43 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் அந்த புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News