உலகம்
ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமானது அல்ல - சொல்கிறார் அமெரிக்க விஞ்ஞானி

Published On 2021-12-07 22:43 GMT   |   Update On 2021-12-07 22:43 GMT
அதிகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. 

இதனால் ஆபத்தான நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த வைரஸ் பரவல் குறித்து பல நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி அந்தோனி பாசி கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பல நாடுகளில் பரவி வரும்  புதிய கொரோனா மாறுபாட்டான ஒமைக்ரான் வைரசானது வேகமாக மிக பரவக்கூடிய ஒன்றாகும். ஆனால் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட தீவிரமானது அல்ல. 

அதிகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக  அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது என தெரிவித்தார்.

Tags:    

Similar News