உலகம்
கொலை நடந்த பகுதி

பாகிஸ்தான் மந்திரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - இலங்கை மந்திரி வலியுறுத்தல்

Published On 2021-12-07 20:58 GMT   |   Update On 2021-12-07 20:58 GMT
பாகிஸ்தானில் இலங்கை நபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இளமையின் குதூகலம், இது எப்போதும் நடப்பதுதான் என பாகிஸ்தான் மந்திரி கூறினார்.
கொழும்பு:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சைலகோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் பிரியந்தா குமரா. இலங்கையை சேர்ந்த அவர், தான் பணிபுரியும் தொழிற்சாலையின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கடந்த வெள்ளிக்கிழமை கிழித்துள்ளார். தெக்ரிக் - இ - லெப்பை பாகிஸ்தான் அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டியில் மதம் சார்ந்த வாசகங்களும் இடம்பெற்றுள்ளது.

சுவரொட்டியை பிரியந்தா கிழிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த தெக்ரிக் - இ - லெப்பை அமைப்பினர் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்டுத்தியதாக பிரியந்தா குமராவை கடுமையாக தாக்கினர்.

தொழிற்சாலைக்கு வெளியே பரபரப்பான சாலையில் திரண்ட 800-க்கும் மேற்பட்டோர் பிரியந்தா குமராவை சரமாரியாகத் தாக்கினர். நடுரோட்டில் வைத்து தாக்கிய கும்பல் அவரை தீ வைத்து எரித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எரித்து கொல்லப்பட்ட குமாராவின் உடல் இலங்கை சென்றடைந்தது.

இதற்கிடையே, இலங்கை நபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இளமையின் குதூகலம், இது எப்போதும் நடப்பதுதான் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி பர்வேஸ் கடக் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இலங்கை மக்கள் பாதுகாப்புத் துறை மந்திரி சரத் வீரசேகரா, சர்வேஸ் கடக் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என இலங்கை மக்கள் பாதுகாப்புதுறை மந்திரி சரத் வீரசேகரா வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

Similar News