உலகம்
நியூயார்க்கில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான்

அமெரிக்காவில் 3 மாகாணங்களில் பரவியது - நியூயார்க்கில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான்

Published On 2021-12-03 08:54 GMT   |   Update On 2021-12-03 08:54 GMT
ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதித்து ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க்:

தென் ஆப்பிரிக்காவில் முதல்முதலாக பரவிய ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நியூயார்க்கில் தற்போது மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மினாசோட்டாவை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார். அவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்பிய கொலராடோ பெண் ஒருவரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட கலிபோர்னியாவை சேர்ந்த பயணி ஒருவருக்கு லேசான அறிகுறி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான பணி நடந்து வருகிறது.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் ஆஸ்திரேலியாவுக்கு பரவத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தலைதூக்கி வருகிறது. அமெரிக்காவில் தற்போது 3 மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News