உலகம்
பராக் அகர்வால்

டுவிட்டரின் புதிய சிஇஓ பராக் அகர்வாலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Published On 2021-12-02 02:23 GMT   |   Update On 2021-12-02 02:23 GMT
டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
வாஷிங்டன் :

‘பேஸ்புக்’குக்கு அடுத்தபடியாக பிரபலமான சமூக வலைத்தளமாக விளங்கி வருவது டுவிட்டர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்த, ஜாக் டோர்சி பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் அவர் சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார், இந்த பட்டியலில் ஏற்கனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தநிலையில் டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பராக் அகர்வாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7½ கோடி) ஊதியமாக பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர போனஸ் உள்ளிட்ட பிற சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News