மாலி நாடு 2012ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
மாலியில் ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 7 வீரர்கள் பலி
பதிவு: அக்டோபர் 31, 2021 22:07 IST
ராணுவ பாதுகாப்பு
பமாகோ:
மாலியின் மேற்கு மற்றும் மத்திய பகுதியில் ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேற்கு மாலியின் மோர்டியா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். சீகோவில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகத்தின்பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலி நாடு 2012ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐ.நா., பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வீரர்கள் மாலியில் முகாமிட்டிருந்தபோதிலும், கிளர்ச்சிகள், ஜிஹாதிகளின் தாக்குதல் மற்றும் இனங்களுக்கு இடையேயான வன்முறைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மத்திய மாலியில் இனப்படுகொலைகள் மற்றும் அரசுப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன.
Related Tags :