செய்திகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

சீனாவில் நவீன ஏவுகணை சோதனை நடந்தது கவலை அளிக்கிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

Published On 2021-10-22 10:58 GMT   |   Update On 2021-10-22 10:58 GMT
சீனா உருவாக்கி உள்ள இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் அணு குண்டை பொருத்தி சீனாவில் இருந்து அமெரிக்காவை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ராணுவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என அனைத்திலும் சீனா, அமெரிக்காவுக்கு இணையாக உள்ளது.

அமெரிக்காவிடம் ஒலியை விட 5 மடங்கு வேமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக் ஏவுகணைகள் உள்ளன. அதே போல சீனாவும் ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இதில் மேலும் நவீனங்களை புகுத்தி கடந்த ஆகஸ்டு மாதம் சீனா சோதனை நடத்தியது.

கடந்த வாரமும் ஒரு சோதனை நடந்தது. ஆனால் அது ஏவுகணை சோதனை அல்ல. ஏவு வாகனத்தின் சோதனை என்று சீனா கூறி உள்ளது. ஆனாலும் அதுவும் ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் சீனா  ஹைபர் சோனிக் ஏவுகணை  சோதனை நடத்தியது தொடர்பாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘சீனா நடத்திய சோதனை கவலை அளிக்கும் வகையில் உள்ளது’’ என்று கூறி உள்ளார்.

சீனா உருவாக்கி உள்ள இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் அணு குண்டை பொருத்தி சீனாவில் இருந்து அமெரிக்காவை  தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைபர் சோனிக் ஏவுகணையை ஏற்கனவே அமெரிக்கா, சீனா தவிர ரஷ்யாவும் வைத்துள்ளது.  இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஹைபர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி இருக்கிறது. இதன் சோதனைகளும் நடந்து வருகின்றன.
Tags:    

Similar News