செய்திகள்
நிலச்சரிவு

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

Published On 2021-10-21 18:32 GMT   |   Update On 2021-10-21 18:32 GMT
வெள்ளம், நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
காத்மண்டு:

நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் பருவ மழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 41 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 49 வீடுகள், 8 கோசாலைகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News