செய்திகள்
கீதா கோபிநாத்

சர்வதேச நிதிய பதவியில் இருந்து விலகும் கீதா கோபிநாத்

Published On 2021-10-21 02:57 GMT   |   Update On 2021-10-21 02:57 GMT
கீதா கோபிநாத், இந்த கவுரமிக்க பதவியை வகிப்பதற்காக ஹார்வார்டு பல்கலைக்கழகம் அவருக்கு 2 ஆண்டுகள் விடுமுறை அளித்த நிலையில், பின்னர் அதை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது.
வாஷிங்டன் :

இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், ஐ.எம்.எப். என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த கீதா கோபிநாத் சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் ஆவார்.

இவர் இந்த தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதார துறையில் பேராசிரியராக இருந்தார்.

கீதா கோபிநாத், இந்த கவுரமிக்க பதவியை வகிப்பதற்காக ஹார்வார்டு பல்கலைக்கழகம் அவருக்கு 2 ஆண்டுகள் விடுமுறை அளித்த நிலையில், பின்னர் அதை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது. இதன் மூலம் சர்வதேச நிதியத்தில் அவரால் 3 ஆண்டுகள் பணியாற்ற முடிந்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் கீதா கோபிநாத் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பதவியில் இருந்து விலகி, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதர துறையில் மீண்டும் இணைய உள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News