செய்திகள்
கொரோனா வைரஸ்

இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-10-19 21:35 GMT   |   Update On 2021-10-19 21:35 GMT
இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
லண்டன்:

இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News