செய்திகள்
இலங்கை

2 வாரங்களில் 7 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை

Published On 2021-10-19 05:39 GMT   |   Update On 2021-10-19 05:39 GMT
பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் உலகளாவிய பயணிகளிடம் இலங்கையை பார்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
கொழும்பு:

சுற்றுலா துறைக்கு பெயர் பெற்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று. சுற்றுலா துறை மூலம் அந்த நாடு பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு இலங்கையின் சுற்றுலா துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்திய அந்த நாட்டு அரசு கொரோனா காரணமாக மூடப்பட்ட தனது எல்லைகளை கடந்த ஜனவரி மாதம் திறந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி பிரசன்ன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 7 ஆயிரத்து 96 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்த ரணதுங்கா, பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் உலகளாவிய பயணிகளிடம் இலங்கையை பார்க்க ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
Tags:    

Similar News