செய்திகள்
பெண்

பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- 35 சதவீத மக்கள் கருத்து

Published On 2021-10-18 09:06 GMT   |   Update On 2021-10-18 09:06 GMT
பலுசிஸ்தான் மாகாணத்தில் இருந்து வரும் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளதாக 74 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கராச்சி நகரை சேர்ந்த சந்தை ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், பாகிஸ்தானில் 35 சதவீதத்தினர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளனர் என்றும், 20 சதவீதம் பேர் பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக, கைபர் பக்துன்இக்வா என்ற பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று 40 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இங்கு பெண்கள் பாதுகாப்பு ஓரளவு பரவாயில்லை என்று 35 சதவீதத்தினரும், பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர் என்று 19 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பஞ்சாபில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று 35 சதவீதம் பேரும், பெண்கள் பாதுகாப்பு ஓரளவு பரவாயில்லை என்று 41 சதவீதம் பேரும், பெண்கள் பாதுகாப்பு முழுமையாக இருப்பதாக 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் இருந்து வரும் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளதாக 74 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால் 19 சதவீத பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தனர்.

மேலும் 29 சதவீத பெண்கள் தாங்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக உள்ளதாகவும், அதற்கு 22 சதவீத ஆண்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News