செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 3 பேர் பலி

Published On 2021-10-16 07:01 GMT   |   Update On 2021-10-16 10:41 GMT
பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டென்பசார்:

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கி கொண்டிஹிந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்தனர்.


நிலநடுக்கத்தால் ஹில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ட்ருன்யான் மற்றும் கிந்தாமணி கிராமங்களில் வீடுகள், அரசு கட்டிடங்கள் இடிந்தன. கரங்காசெம் பகுதியில் வீடு இடிந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாள்.

இதையும் படியுங்கள்...வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா

Tags:    

Similar News