செய்திகள்
ஐநா சபை

6வது முறையாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான இந்தியா

Published On 2021-10-15 20:48 GMT   |   Update On 2021-10-15 20:48 GMT
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடாக பெரும்பான்மை ஆதரவுடன் 6-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 

மனித உரிமைகள் ஆணையத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6-வது முறையாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைகான இந்திய தூதர் திருமூர்த்தி, ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியா அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என தெரிவித்துள்ளார். 

தற்போதைய தேர்தல் மூலமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு வரை மனித உரிமைகள் ஆணைய உறுப்பு நாடாக இந்தியா  இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News