செய்திகள்
ஜான் கெர்பி

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது - அமெரிக்கா கவலை

Published On 2021-10-01 16:22 GMT   |   Update On 2021-10-01 16:22 GMT
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
 
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளிர் காலத்தின்போது தலிபான் தலைவர்களுக்கு  இடமளிப்பது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது என பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக பாகிஸ்தானை ஆப்கான் அரசு குற்றம்சாட்டியது.

இந்நிலையில், தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்துவிட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜான் கெர்பி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேசித் தீர்க்க விரும்புகிறோம்.

எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்லாது, பாகிஸ்தானுக்கும் பாதிப்பு உள்ளது என்பதை அந்நாடு உணரவேண்டும் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மீது டிரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவைப்பட்டால் டிரோன் தாக்குதல் நடத்துவது தொடரும் என ஜான் கெர்பி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News