செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2021-09-28 19:55 GMT   |   Update On 2021-09-28 19:55 GMT
பாகிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய வேட்டையில், வடமேற்கு எல்லை மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் நான்கு பேர் தளபதிகளாகும். அதோது மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபடுதல், அப்பாவி மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News