செய்திகள்
தென்கொரிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஐ.நா. பொதுக்கூட்டத்திற்கு மத்தியில் 3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2021-09-22 04:15 GMT   |   Update On 2021-09-22 04:15 GMT
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, சுமுகமான பயணம், தடுப்பூசி அணுகல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
நியூயார்க்:

ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில், ஐநா பொதுசபை கூட்டத்தின் இடையே தென் கொரியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பின்போது அந்தந்த நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவது, சுமுகமான பயணம், தடுப்பூசி அணுகல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரியுடன் தடுப்பூசி அணுகல் மற்றும் சுமூகமான பயணம் தொடர்பான சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், நாளை ஆப்கானிஸ்தான் பற்றிய கலந்துரையாடலில் அவருடன் பேச உள்ளதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News