செய்திகள்
கம்லா ஹாரிஸ்

ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை - கமலா ஹாரிஸ்

Published On 2021-08-24 01:24 GMT   |   Update On 2021-08-24 01:24 GMT
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை காக்க வேண்டியது எங்களின் கடமை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது.

இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். 

இந்நிலையில், ஆப்கன் நிலவரம் குறித்து அவர் கூறுகையில், அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றார்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூரை அடுத்து அவர் வியட்நாம் சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News