செய்திகள்
சேதமடைந்த வீடுகள்

ஹைதி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக அதிகரிப்பு

Published On 2021-08-23 19:01 GMT   |   Update On 2021-08-23 19:01 GMT
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மாயமாகியுள்ள 344 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
போர்ட் ஆப் பிரின்ஸ்:

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஹைதியில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,207 ஆக அதிகரித்துள்ளது என ஹைதி அரசு தெரிவித்துள்ளது. மேலும், 344 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 12,268 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது
Tags:    

Similar News