செய்திகள்
ஆன்டனியோ குட்டரெஸ்

ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

Published On 2021-07-31 22:46 GMT   |   Update On 2021-07-31 22:46 GMT
ஆப்கனில் ஐ.நா. சபை வளாகம் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். 



இதில், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பிற அதிகாரிகளும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை. 

இந்நிலையில், ஐ.நா. சபை வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். 
Tags:    

Similar News