செய்திகள்
பயண தடை

கொரோனா அச்சம் - இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீட்டித்த இஸ்ரேல்

Published On 2021-07-31 19:25 GMT   |   Update On 2021-07-31 19:25 GMT
கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பல்வேறு நாட்டு பயணிகளுக்கு இஸ்ரேல் நாடு தடை விதித்துள்ளது.
ஜெருசலேம்:

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வது இடத்தில் உள்ளது. அங்கு 8.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500ஐ நெருங்குகிறது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

எனினும், விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம். இந்த நாடுகள் தவிர்த்து, பிற 18 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கடுமையான எச்சரிக்கையையும் இஸ்ரேல் விடுத்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News