செய்திகள்
விமான சேவை

இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2 வரை நீட்டிப்பு - யுஏஇ அறிவிப்பு

Published On 2021-07-27 20:53 GMT   |   Update On 2021-07-27 20:53 GMT
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.
அபுதாபி:

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக, துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக திகழ்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது. 
 
ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட  அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News