செய்திகள்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

Published On 2021-07-24 20:26 GMT   |   Update On 2021-07-24 20:26 GMT
ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி  உறுதிசெய்துள்ளார்.

வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும் ஹாசன் தப்பின் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த ராணுவம் வான்வழித் தாக்குலைத் தொடர்ந்தது. இதில் 19 பயங்கரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் தலிபான்கள் பயன்படுத்திய ஆறு இருசக்கர வாகனங்கள், இரண்டு பதுங்கு குழிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர். 

இதேபோல், ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர்.
Tags:    

Similar News