செய்திகள்
வளர்ப்பு நாய் சாம்ப்

உற்ற நண்பனை இழந்து வாடுகிறோம் - வளர்ப்பு நாய் மறைவு குறித்து ஜோ பைடன் உருக்கம்

Published On 2021-06-19 18:57 GMT   |   Update On 2021-06-19 18:57 GMT
அதிபர் பைடன் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு பிராணிகளுடன் கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.

பைடன் 2008-ம் ஆண்டு ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், 2018-ம் ஆண்டு அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய்களில் ஒன்றான சாம்ப் இன்று இறந்தது.



சாம்ப் மறைவு குறித்து அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 13 ஆண்டு காலம் எங்கள் குடும்பத்தின் உற்ற நண்பனாக விளங்கிய சாம்பை இழந்து வாடுகிறோம் என தெரிவித்துள்ளனர். 

சாம்ப் இனிமையானவன் மட்டுமல்ல, நல்ல பையனும் கூட என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News