செய்திகள்
கோப்புப்படம்

சீன அணுமின் நிலையத்தில் கசிவு - ஆபத்து இல்லை என்கிறது அரசு

Published On 2021-06-15 19:45 GMT   |   Update On 2021-06-15 19:45 GMT
அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பாக பிரெஞ்சு நிறுவனம் எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
பீஜிங்:

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் டைஷான் அணுமின் நிலையம் உள்ளது. குவாங்டாங் அணுமின் சக்தி குழுமமும், பிரான்ஸ் நிறுவனமும் இதை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அந்த அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. அணுமின் நிலையத்தின் பங்குதாரரான பிரெஞ்சு நிறுவனம் அதுகுறித்து எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, டைஷான் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவு அசாதாரணமான அளவில் அணுக்கதிர்வீச்சு இல்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை. பொது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
Tags:    

Similar News