செய்திகள்
ஊரடங்கு

கொரோனா பரவல் எதிரொலி - மலேசியாவில் ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு

Published On 2021-05-29 17:56 GMT   |   Update On 2021-05-29 17:56 GMT
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மலேசியாவில் இதுவரை 5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகி உள்ளனர்.

மலேசியாவில் இதுவரை 5,58,534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மலேசிய நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலாக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை நீடிக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்தே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News