செய்திகள்
கோப்புப்படம்

ஜோ பைடன் ஆட்சியில் முதல் முறையாக அமெரிக்கா, சீனா வர்த்தக பேச்சுவார்த்தை

Published On 2021-05-27 19:02 GMT   |   Update On 2021-05-27 19:02 GMT
ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.இந்த நிலையில் அவரது ஆட்சியில் முதன்முதலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது
வாஷிங்டன்:

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அந்த நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்தது. அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும், சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. இதன் தாக்கம் உலகமெங்கும் எதிரொலித்தது.இப்போது அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது ஆட்சியில் முதன்முதலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.நேற்று இந்த பேச்சு வார்த்தையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேதரின் தையும், சீன துணைப்பிரதமர் லியு ஹீயும் காணொலி காட்சி வழியாக நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவின் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேதரின் தையும், சீன துணைப்பிரதமர் லியு ஹீயும் ஜோ பைடன் நிர்வாகத்தின் தொழிலாளர்களை மையப்படுத்திய வர்த்தக கோட்பாடுகளின் வழிகாட்டுதல் கொள்கைகள் மற்றும் அமெரிக்க, சீன உறவைப்பற்றிய தொடர்ச்சியான மறு ஆய்வு குறித்து விவாதித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடர்வது என ஒப்புக்கொண்டனர்.
Tags:    

Similar News