செய்திகள்
விமான சேவை

கொரோனா பரவல் அதிகரிப்பு - இந்தியா, பாகிஸ்தான் விமானங்களுக்கான தடையை நீடித்தது கனடா

Published On 2021-05-21 19:59 GMT   |   Update On 2021-05-21 19:59 GMT
இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
நட்டவா:

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
 
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் 30 நாட்கள் தடை விதித்தது.



இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு மேலும் 30 நாள்கள் தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறியதாவது:-

ஏப்ரல் 22-ம் தேதி விதிக்கப்பட்ட தடை உத்தரவால் கொரோனா பாதிப்பின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து கனடாவுக்கு பயணிகள் விமானம் வருவதற்கான தடை மேலும் 30 நாட்கள் (ஜூன் 21 வரை)  நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News