செய்திகள்
இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்- ஹேக்கிங் செய்ய முயற்சி

Published On 2021-05-19 10:13 GMT   |   Update On 2021-05-19 10:13 GMT
நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகும். விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைய தளங்களில் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொழும்பு:

இலங்கை அரசு இணைய தளங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் ஊடுருவுவது வழக்கமாக உள்ளது. அதை இலங்கை அரசு தடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று இலங்கை அரசின் பல இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவினார்கள். குறிப்பாக இலங்கை சுகாதார துறை, ரஜ ரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மர்ம நபர்கள் புகுந்து ஹேக்கிங் செய்ய முயற்சித்தனர்.

அதேபோல இலங்கையில் உள்ள சீன தூதரக அலுவலக இணையதளத்திலும் புகுந்தனர். இதையறிந்த இலங்கை அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை.

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகும். இதனால் விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்பு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று இலங்கை அரசு இணைய தளங்களில் ஊடுருவல் நடந்து உள்ளது. அப்போது பாதிப்பு தடுக்கப்பட்டது.

இந்த ஊடுருவலை வெளிநாடுகளில் இருந்து செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News