செய்திகள்
கோப்புபடம்

2 மாதத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்பு வரலாம் - மந்திரி எச்சரிக்கை

Published On 2021-05-14 07:06 GMT   |   Update On 2021-05-14 07:06 GMT
கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். அதை கண்காணிக்க ராணுவமும், போலீசும் களம் இறக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமத் குரோஷி கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்:

இந்தியாவில் கொரோனா தாக்கம் மோசமான நிலையில் இருந்தாலும் பக்கத்து நாடான பாகிஸ்தானில் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அங்கும் தற்போது பரவல் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரேநாளில் 3,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுசம்பந்தமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமத் குரோஷி கூறியதாவது:-

பாகிஸ்தானில் நோய் பரவல் கட்டுக்குள் இருந்தாலும் சில இடங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்கத்து நாடான இந்தியாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


இன்னும் 2 மாதத்தில் பாகிஸ்தானில் நோய்பரவல் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். அதை கண்காணிக்க ராணுவமும், போலீசும் களம் இறக்கப்படுவார்கள். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News