செய்திகள்
நிலநடுக்கம்

ஜப்பானில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published On 2021-05-14 01:14 GMT   |   Update On 2021-05-14 01:14 GMT
ஜப்பானில் இன்று காலை 6 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று காலை 5.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு தீவில் உணரப்பட்டது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் ஜப்பானில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
Tags:    

Similar News