செய்திகள்
கமலா ஹாரிஸ்

டெல்லியில் உள்ள உறவினருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமலா ஹாரிஸ்

Published On 2021-05-07 08:04 GMT   |   Update On 2021-05-07 08:04 GMT
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் டெல்லியில் உள்ள உறவினருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது உறவினர்கள் டெல்லியில் வசித்து வருகிறார்கள். இதற்கிடையே கமலா ஹாரிசின் மாமா ஜி.பாலச்சந்திரன் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல உறவினர்கள் யாரும் நேரில் செல்லமுடியவில்லை.

இந்தநிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொலைபேசியில் ஜி.பாலச்சந்திரனை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஜி.பாலச்சந்திரன் இணைய தளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதில் அவர், ‘துரதிருஷ்டவசமாக எனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட முடியவில்லை. நான், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது வாஷிங்டனில் வசிக்கும் எனது மகள் மற்றும் உறவினரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கமலாஹாரிசிடம் கேட்டுக்கொண்டேன்.

அதற்கு கமலா ஹாரிஸ், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் மகளை நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News