செய்திகள்
கோப்புப்படம்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி

Published On 2021-05-06 00:24 GMT   |   Update On 2021-05-06 00:24 GMT
கனடாவில் 40 வயதை கடந்தவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
டொரண்டோ:

கனடாவில் 40 வயதை கடந்தவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த மாதம், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட கியுபெக் மாகாணத்தை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், ரத்த உறைதலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இந்தநிலையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் ஒரு பெண் இறந்ததை கனடா அரசு உறுதி செய்துள்ளது. அல்பெர்டா மாகாணத்தை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர், ரத்தம் உறைந்ததால் பலியானதாக கனடா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டீனா ஹின்ஷா தெரிவித்தார்.

அல்பெர்டா மாகாணத்தில் இதே தடுப்பூசி போட்டுக் கொண்ட 2 லட்சத்து 53 ஆயிரம் பேரில் இவர் ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News