செய்திகள்
வெள்ளை மாளிகை

மே 4 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை - வெள்ளை மாளிகை

Published On 2021-05-01 00:44 GMT   |   Update On 2021-05-01 00:44 GMT
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
வாஷிங்டன்:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.



இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறீர்களோ அவ்வளவு பாதுகாப்பானது. இந்தியாவை விட்டு நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News