செய்திகள்
ஆக்சிஜன் - கோப்புப்படம்

இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பும் சவுதி அரேபியா

Published On 2021-04-25 23:37 GMT   |   Update On 2021-04-25 23:37 GMT
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களின் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ரியாத்:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களின் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையடுத்து, உள்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான இடங்களுக்கு விரைந்து கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆக்சிஜனை வழங்கி வருகின்றன.அந்த வகையில் சவூதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது. அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சவுதி அரேபியா இந்தியாவுக்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்ய உள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News