செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை

Published On 2021-04-24 19:56 GMT   |   Update On 2021-04-24 19:56 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து வருகிற விமானங்களுக்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஏற்கனவே தடை விதித்துள்ளன.
துபாய்:

இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவைத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வருகிற விமானங்களுக்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஏற்கனவே தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாக வருகிற அனைத்து வணிக விமான போக்குவரத்துக்கும் குவைத் நேற்று தடை போட்டுள்ளது.

இது குறித்து குவைத் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “24-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வணிக விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளோம். இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடு வழியாகவோ வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்கு வெளியே குறைந்தது 14 நாட்கள் கழித்திருக்காவிட்டால் அவர்கள் குவைத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என கூறி உள்ளார்.

அதே நேரத்தில் குவைத் மக்கள், அவர்களின் குடும்ப உறவினர்கள், வீட்டு பணியாளர்கள் நாட்டில் நுழைய அனுமதி உண்டு. சரக்கு விமான சேவைகளும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News