செய்திகள்
கொரோனா பரிசோதனை

பிரிட்டனை துரத்தும் கொரோனா - 44 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

Published On 2021-04-23 18:11 GMT   |   Update On 2021-04-23 18:11 GMT
பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
லண்டன்:

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியுள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
 
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 2 ஆயிரத்து 678 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தைக் கடந்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 385 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News