செய்திகள்
சிறுவன் ஆடம்டோலிடோ

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்

Published On 2021-04-16 10:52 GMT   |   Update On 2021-04-16 10:52 GMT
கடந்த 11-ந்தேதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சிறுவனை போலீசார் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிகாகோ:

அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த வீடியோவை 2 வாரம் கழித்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஆடம்டோலிடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்கிறார். பின்னர் சிறுவனை துப்பாக்கியால் சுடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

குண்டு காயம் பட்ட சிறுவன் சுருண்டு விழுந்து இறந்தான். அந்த சிறுவன் ஆயுதம் வைத்திருந்ததாகவும், ரூபன்ரோமன் என்பவருடன் தப்பி ஓடியதாகவும் சிகாகோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆடம் டோலிடோ சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருகில் வேலியின் பின்னால் துப்பாக்கியை வீசியுள்ளார் என்பது தெரிய வந்தது.

கடந்த 11-ந்தேதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சிறுவனை போலீசார் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட்டை போலீஸ் அதிகாரி காலால் கழுத்து நெரித்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News