செய்திகள்
கோப்புப்படம்

ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் - துருக்கி வீரர் பலி

Published On 2021-04-15 19:08 GMT   |   Update On 2021-04-15 19:08 GMT
ஈராக் ராணுவ தளத்தை குறி வைத்து 3 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ராக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.
அங்காரா:

ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.

அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ராக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.

இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

எனவே துருக்கி படைகள் நடத்தி வருகிற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த தாக்குதலை குர்தீஷ் போராளிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த குர்தீஷ் இன போராளிகளை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News