செய்திகள்
கோப்புப்படம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க அமெரிக்கா பரிந்துரை

Published On 2021-04-14 02:09 GMT   |   Update On 2021-04-14 02:09 GMT
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
வாஷிங்டன்:

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்துமே இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.

அதே சமயம் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது‌

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 பெண்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடியும் வரை ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News