செய்திகள்
அதிபர் ஜோ பைடன்

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜோ பைடன்

Published On 2021-03-29 23:39 GMT   |   Update On 2021-03-30 17:16 GMT
அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.‌

அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று முதல் ஏப்ரல் 19-ம் தேதிக்குள் அமெரிக்காவில்  90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்.

அமெரிக்காவில் 3 வாரங்களுக்குள் 90 சதவீத பேருக்கு தடுப்பூசி போட உள்ளோம். ஊசி போடும் முகாம்கள் அவர்கள் வசிக்கும் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்படும்.

17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தற்போது 40 ஆயிரம் முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News