செய்திகள்
கிறிஸி டீஜென்

அமெரிக்காவில் புகழ் பெற்ற மாடல் அழகி டுவிட்டரில் இருந்து விலகினார்

Published On 2021-03-25 18:41 GMT   |   Update On 2021-03-25 18:41 GMT
நான் தவறுகள் செய்திருக்கலாம். அவற்றுக்கு பொறுப்பு கூறப்படுகிறேன். நான் இங்கு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் என மாடல் அழகி கிறிஸி டீஜென் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகி கிறிஸி டீஜென் (வயது 35).

இவர் டுவிட்டர் சமூக ஊடகத்தில் இருந்து திடீரென விலகி உள்ளார். டுவிட்டர் சமூக ஊடகம் தனக்கு சாதகமாக சேவை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, அவர் டுவிட்டர் கணக்கை நீக்கி விட்டார்.

இதையொட்டி அவர் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஹேய், 10 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் என் உலகமாக இருந்து வருகிறீர்கள். நாம் இங்கு உருவாக்கிய உலகத்துக்கு நான் நேர்மையாக கடன்பட்டிருக்கிறேன். உங்களில் பலரை எனது உண்மையான நண்பர்களாக கருதுகிறேன்.

ஆனால் நான் விடைபெற வேண்டிய நேரம் இது. இது எனக்கு எதிர்மறையாக சேவை செய்வதால், இனி சாதகமாக வேலை செய்யாது. எனவே இதில் இருந்து நான் விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். நான் எப்போதும் வலுவான கை தட்டல் பெண்ணாக இதில் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் அப்படி இல்லை-. நான் இங்கு வந்ததை விட இப்போது வித்தியான மனுசி.

உங்கள் வார்த்தைகள் எனக்கு முக்கியம்.

நான் தவறுகள் செய்திருக்கலாம். அவற்றுக்கு பொறுப்பு கூறப்படுகிறேன். நான் இங்கு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கிறிஸி டீஜென், டுவிட்டரில் இருந்து விலகி இருப்பது அமெரிக்காவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News