செய்திகள்
ஜோ பைடன்

அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு

Published On 2021-03-17 17:05 GMT   |   Update On 2021-03-17 17:05 GMT
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பார் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ஆனால், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று 3 மாதங்களாகும் நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கிறார். இந்நிலையில் வரும் 25ம் தேதி அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் 40 கேள்விகள் வரை ஜோ பைடனிடம் கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News