செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் - உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு நாளை ஆலோசனை

Published On 2021-03-16 00:00 GMT   |   Update On 2021-03-16 00:00 GMT
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.
ஜெனீவா:

உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.

இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.  இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. 

இதற்கிடையே, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தங்களது தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூட உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள்  மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News