செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 31,312 பேருக்கு தடுப்பூசி

Published On 2021-03-06 04:37 GMT   |   Update On 2021-03-06 04:37 GMT
அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அபுதாபி:

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட அமீரகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், நாள்பட்ட வியாதி உள்ளவர்களுக்கும் போட முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை அமீரகம் முழுவதும் 62 லட்சத்து 35 ஆயிரத்து 316 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 100-இல் 63.04 பேருக்கு என்ற அளவில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசியானது கொரோனா பாதிப்பை தடுக்க உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News