செய்திகள்
ஸ்பேஸ் எக்ஸ்

2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி

Published On 2021-03-04 21:25 GMT   |   Update On 2021-03-04 21:25 GMT
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் அந்த நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று விட்டு வெற்றிகரமாக பூமிக்கு (டெக்சாஸ் மாகாணம், போகா சிகாவுக்கு) திரும்பியது.

அதே நேரத்தில் பூமியை தொட்ட 6 நிமிடங்களில் இந்த ராக்கெட் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 2 முறை ஏவி அந்த ராக்கெட்டுகளின் பயணம் தோல்வி கண்ட நிலையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு, பூமிக்கு திரும்பியதில் வெற்றி காணப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஏவுதல் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராக்கெட் கிடைமட்டமாக இருக்கிறபோது அதை கட்டுப்படுத்த மடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதுதான் இந்த ஏவுதலின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

எனவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News