செய்திகள்
தரையிறங்கியதும் வெடித்த ராக்கெட்

தரையிறங்கிய சில வினாடிகளில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

Published On 2021-03-04 13:17 GMT   |   Update On 2021-03-04 13:17 GMT
தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் கூறி உள்ளார்.
வாஷிங்டன்: 

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை தயாரித்து சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையில்,  வெற்றிகரமாக புறப்பட்டு இலக்கை அடைந்த ராக்கெட், தரையிறங்கும்போது வெடித்து சிதறியது.

இதையடுத்து முந்தைய குறைபாடுகள் சரி செய்யப்பட்டு நேற்று மீண்டும் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை செய்யப்பட்டது.  அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட இந்த ராக்கெட்,  வெற்றிகரமாக பயணத்தை தொடங்கி, சிறிய தடுமாற்றத்துடன் தரையிறங்கியது. ஆனால் நிலத்தை தொட்ட சில வினாடிகளில் ராக்கெட் தீப்பிடித்து வெடித்து சிதறியது. 

3 என்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்ததே ராக்கெட் வெடித்து சிதற காரணம் என்று கூறப்படுகிறது. 

ராக்கெட் வெடித்துள்ள போதும் தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News