செய்திகள்
கோப்புப்படம்

கள்ளச்சந்தையில் மருந்து விற்ற இந்திய வம்சாவளி மருந்தக உரிமையாளருக்கு சிறை

Published On 2021-03-04 02:24 GMT   |   Update On 2021-03-04 02:24 GMT
இங்கிலாந்தில் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கள்ளச்சந்தையில் மருந்துச்சீட்டு இல்லாமலே மருந்து விற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது
லண்டன்:

இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில் மருந்துக்கடை நடத்தி வந்தவர் பல்கீத் சிங் கைரா (வயது 36). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், இவர் தனது மருந்துக்கடையில், டாக்டரின் மருந்துச்சீட்டுடன் மட்டுமே விற்க வேண்டிய சில மருந்துகளை மருந்துச்சீட்டு இல்லாமலே விற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்று 10 லட்சம் பவுண்டு சம்பாதித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை, பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பல்கீத்சிங் கைரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
Tags:    

Similar News