செய்திகள்
நைஜீரியா பள்ளி

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 317 பேரை கடத்திய பயங்கரவாதிகள்

Published On 2021-02-27 09:06 GMT   |   Update On 2021-02-27 09:06 GMT
நைஜீரியாவில் பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
லாகோஸ்:

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.

அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்த 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பல மணி நேரம் இருப்பதற்காக வெளியில் இருந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் மாணவிகளை கடத்தி செல்வதை தடுக்க முடியவில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு 276 பள்ளி மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


Tags:    

Similar News